ஆளுமை:நாகம்மா, மகாலிங்கம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:32, 14 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=நாகம்மா மகா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நாகம்மா மகாலிங்கம்
பிறப்பு 1946.03.22
ஊர் மந்துவில்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ம.நாகம்மா (1946.03.22 - ) யாழ்ப்பாணம் மந்துவிலைப் பிறப்பிடமாகவும் நல்லூரை வசிப்பிடமகவும் கொண்ட கர்நாடக இசைக் கலைஞர். இவர் ஆரம்பக் கல்வியை மந்துவில் றோமன் கத்தோலிக்க பாடசாலையிலும், இடைநிலைக் கல்வியை யாழ்ப்பாணம் வரணி மகா வித்தியாலயத்திலும், பின் கோப்பாய் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் மூன்று ஆண்டுகள் கற்றுத் தேர்ந்து பட்டம் பெற்றும் பயிற்றப்பட்ட ஆசிரியராக வெளியேறினார். அத்தோடு இவர் ஈழத்தின் புகழ் பூத்த நடனக் கலைஞர் லீலா நாராயணனின் மாணவியாவார்.

சத்தியவான் சாவித்திரி, பவளக்கொடி, கோவலன் கண்ணகி, அரிச்சந்திர மயான கண்டம் போன்ற இசை நாடகங்களில் நடித்திருக்கு இவர் இந்நாடக பாடல்களைத் தாமே இசையமைத்து பாடி நடித்துள்ளார். இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் வானொலி கலைஞரக தெரிவு செய்யப்பட்ட இவர் 1981ஆம் ஆண்டு முதல் 1985ஆம் ஆண்டு காலப்பகுதி வரை இசைக் கச்சேரி, திருமுறைப் படல்கள், பண்ணிசைப் பாமலை, பக்த ரஞ்சனி போன்ற நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளர்.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 107