ஆளுமை:பாக்கியலட்சுமி, நடராசா

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:00, 14 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=பாக்கியலட்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பாக்கியலட்சுமி நடராசா
தந்தை நடராசா
பிறப்பு 1945.01.12
ஊர் கந்தர்மடம்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ந.பக்கியலட்சுமி (1945.01.12 - ) யாழ்ப்பாணம் கந்தர்மடத்தை சேர்ந்த வயலின் கலைஞர். இவரது தந்தை நடராசா. சிறுவயது முதல் இசைத்துறையில் ஆர்வம் கொண்டிருந்த இவர் பாடசாலையில் இடம்பெறும் இசைப் போட்டிகளிலும், இலக்கியப் போட்டிகளிலும் வெற்றிப் பெற்று பலரது பாரட்டுதல்களையும் பெற்றுள்ளார். வயலின் இசையை பிரம்மஶ்ரீ. சர்வேஸ்வரசர்மாவிடம் முறைப்படி கற்றரிந்த இவர் சித்திவிநாயகம் அவர்களிடமும் வயலின் இசையை தொடர்ந்தும் கற்று வந்தார். பின்னர் சென்னையில் பிரபல்யமான கர்நாடக இசைக் கல்லூரியில் வயலின் இசையைக் கற்றார்.

1970ஆம் ஆண்டு சங்கீத வித்துவான் பட்டம் பெற்ற இவர் இலங்கை திரும்பி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இராமநாதன் நுண்கலைப் பீடத்தில் நியமனம் பெற்று இசைக்கலையை மாணவர்களுக்கு போதித்து வந்தார். பின் 1999ஆம் ஆண்டு முதுதத்துவமாணிப் பட்டம் பெற்று சிரேஷ்ட விரிவுரையாளராக கடமையாற்றினார். 2005ஆம் ஆண்டு இவரது கலைப்பணியைப் பாராட்டி நல்லூர் பிரதேசக் கலாசாரப் பேரவை இவருக்கு கலைஞானச்சுடர் விருதினை வழங்கி கௌரவித்துள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 105