ஆளுமை:இராதாகிருஷ்ணன், உருத்திராபதி

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:55, 14 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=ராதாகிருஷ்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ராதாகிருஷ்ணன், உருத்திராபதி
தந்தை உருத்திராபதி
பிறப்பு 1943.06.27
ஊர் அளவெட்டி
வகை கவிஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

உ.ராதாகிருஷ்ணன் (1943.06.27 - ) யாழ்ப்பாணம் அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், இணுவிலை வசிப்பிடமாகவும் கொண்ட வயலின் கலைஞர். இவரது தந்தை உருத்திராபதி. இவர் ஆரம்பத்தில் தனது தந்தையிடம் வயலின் இசையக் கற்று கொண்டு பின் திரு.ஜீ.சண்முகனந்தனிடமும் அதன் பின்னர் இந்தியா சென்று வயலின் மேதை எம்.எஸ்.அனந்தராமனிடமும் வயலின் இசையின் நுணுக்கங்களை முழுமையாக கற்றுக் கொண்டார்.

யாழ்.பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைக் கல்லூரியில் பத்து வருடங்களுக்கு மேலாக வயலின் பயிற்றுவிக்கும் ஆசிரியராக கடமையாற்றிய இவர் வயலின் இசையை ஏனைய கலைஞர்களும் பயன்பெறும் வகையில் மூன்று ஒலி C.D.க்களை கொழும்பில் வெளியிட்டுள்ளார். இரண்டாயிரத்து ஐந்நூறுக்கும் மேற்பட்ட இசைக் கச்சேரிகளில் வயலின் இசைத்து முன்னணி வயலின் இசைக் கலைஞராக இவர் விளங்குகிறார். இந்தியா, கனடா, சிங்கப்பூர், மலேசியா, லண்டன், ஜேர்மன் போன்ற வெளிநாடுகளில் உள்ளவர்களும் இவரை அங்கு வரவழைத்து இவரது வயலின் இசையை அனுபவித்துள்ளனர். இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் ஆகியவற்றின் உயர்தர கலைஞராக இவர் செயற்பட்டுள்ளார்.

இவரது அளப்பறிய கலைச்சேவையைப் பாராட்டி இன்னிசை வேந்தன் இசை ஞான கலாநிதி சிவகலாபூஷணம் எனப் பல பட்டங்களை சமூக அமைப்புக்களும், ஆலய தேவஸ்தானங்களும், அரச, தனியார் நிறுவனங்களும் வழங்கி கௌரவித்துள்ளன. மேலும் நல்லூர் கலாசரப் பேரவை 2005ஆம் ஆண்டு இவரை கௌரவித்து கலைஞானச்சுடர் என்னும் விருதினை வழங்கியுள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 100