ஆளுமை:பவானி, ஆழ்வாப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:53, 14 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பவானி ஆழ்வாப்பிள்ளை
தந்தை ஆழ்வாப்பிள்ளை
பிறப்பு
ஊர் அளவெட்டி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பவானி ஆழ்வாப்பிள்ளை யாழ்ப்பாணம் அளவெட்டியை பிறப்பிடமாகவும் பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட பெண்ணிய எழுத்தாளர். இவரது தந்தை ஆழ்வாப்பிள்ளை. பேராதனை பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்த இவர் ஈழத்துச் சிறுகதை வரலாற்றில் முதன்முதலாக பெண்ணியவாதத்தை முன்வைத்தவராகக் கருதப்படுகிறார். 1960களில் சிறுகதைகளின் ஊடாக மிக துணிச்சலாக பெண்ணியம் சார்ந்த கருத்துக்களை பதிவுசெய்தார்.

இவரது சிறுகதைகள் 195665 காலப்பகுதியில் வீரகேசரி, சுதந்திரன், ஈழநாடு, கலைச்செல்வி, மரகதம், சங்கம், தேனருவி முதலான இதழ்களில் வெளியாகின. லக்சுமி, பொரிக்காத முட்டை, மன்னிப்பாரா, காப்பு, விடிவை நோக்கி, சரியா தப்பா, பிரார்த்தனை என்பன இவரது சில முக்கிய சிறுகதைகள். இச் சிறுகதைகள் 1994ஆம் ஆண்டு 'கடவுளரும் மனிதரும்' எனும் சிறுகதைத் தொகுப்பாக பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளன.

இவற்றையும் பார்க்கவும்

வளங்கள்

  • நூலக எண்: 300 பக்கங்கள் 138-139

வெளி இணைப்புக்கள்