ஆளுமை:நடராசா, இராமலிங்கம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:41, 12 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=இராமலிங்கம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இராமலிங்கம், நடராசா
தந்தை நடராசா
பிறப்பு 1926.12.01
இறப்பு 2006
ஊர் நல்லூர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இ.நடராசா (1926.12.01 - 2006) யாழ்ப்பாணம் நல்லூரைச் சேர்ந்த கலைஞர். இவரது தந்தை நடராசா. ஆரம்பக் கல்வியை யாழ் இந்துக் கல்லூரியில் கற்ற இவர் பாடசாலைக் காலத்திலேயே பல சமய, சங்கீத, பண்ணிசைப் போட்டிகளில் முதலிடங்களைப் பெற்றவர். இவர் சிதம்பரம், ஆ.இராசப்பிள்ளை, பரமேஸ்வர ஐயர் ஆகியோரிடம் ஆரம்ப காலத்தில் இசைப் பயிற்சியைப் பெற்றுக் கொண்டு பின்னர் மேற்படிப்புக்காக இந்தியா சென்று சிதம்பர அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இணைந்து அங்கு இசைப் பயிற்சியைப் பெற்ற காலத்தில் பல்கலைக்கழகத் தலைவராக இருந்த சித்தூர் சுப்பிரமணியம் பிள்ளையிடம் குருகுல முறையிலும் இசையை கற்றுக் கொண்டார். அங்கு சங்கீத பூஷணம் பட்டம் பெற்று இலங்கை வந்த இவர் யாழ்ப்பாணம் ரசிகரஞ்சன சபாவில் 1951ஆம் ஆண்டு தனது முதலாவது இசைக் கச்சேரியை நிகழ்த்தினார்.

இவர் ஈழத்தின் பல பாகங்களிலுமுள்ள அரச பாடசாலைகளில் இசையாசிரியராக பணியாற்றினார். பின்னர் அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்ற இவர் 1982ஆம் ஆண்டு அரசினால் ஆரம்பிக்கப்பட்ட மட்டக்களப்பு விபுலானந்தர் இசைக் கல்லூரியில் அதிபராகப் பொறுப்பேற்று 1982ஆம் ஆண்டு முதல் 1987ஆம் ஆண்டு வரை பணிபுரிந்தார். இக் கலைஞர் நாற்பது ஆண்டுகளுக்கு மேல் இசைப் பணி ஆற்றியுள்ளார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகம், இராமநாதன் நுண்கலைக்கழகம் ஆகியவற்றின் பகுதி நேர விரிவுரையாளராக பணியாற்றிய இவரை 1993ஆம் ஆண்டு அகில இலங்கை கம்பன் கழகம் இசைப் பேரறிஞர் எனும் விருது வழங்கி கௌரவித்துள்ளது. அத்தோடு 1987ஆம் ஆண்டு பிரதேச அபிவிருத்தி அமைச்சராக இருந்த செல்லையா இராசதுரை குரலிசை பூஷணம் என்னும் பட்டத்தை இவருக்கு வழங்கி கௌரவித்தார். நல்லூர் கலாசாரப் பேரவை இவருக்கு கலைஞானச்சுடர் எனும் பட்டம் வழங்கி கௌரவித்தது.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 87