ஆளுமை:பரமலிங்கம், தம்பிராசா

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:18, 8 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=பரமலிங்கம்,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பரமலிங்கம், தம்பிராசா
தந்தை தம்பிராசா
பிறப்பு 1945.05.29
ஊர் மானிப்பாய்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


த.பரமலிங்கம் (1945.05.29 - ) யாழ்ப்பாணம் மானிப்பாயைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் எழுத்தாளர். இவரது தந்தை பெயர் தம்பிராசா. இவர் தன் குடும்பநிலைக் காரணமாக பாடசாலை படிப்பினை இரண்டாம் வகுப்புடன் இடை நிறுத்திக் கொண்டார். நாடகம், சிறுகதை, நாவல், கவிதைத்துறைகளில் ஆற்றல் மிக்கவராக விளங்கும் இவர் கவிதைத்துறையில் மிகையான ஈடுபாடு கொண்டவராவார்.

இலங்கையில் வெளிவரும் வீரகேசரி, தினகரன் போன்ற பல பத்திரிகைகளில் இவரது ஆக்கங்கள் வெளிவந்துள்ளன. 1962ஆம் ஆண்டு முதல் தனது இலக்கிய ஆற்றலை வெளிப்படுத்தி வரும் இக்கலைஞர் யாழ்ப்பாண திறந்தவெளி அரங்கு, யாழ் மாநகர சபை கலையரங்கு, உடுவில் மருதனார்மடம் திறந்தவெளி அரங்கு போன்ற புகழ் பெற்ற யாழ்ப்பாண மாவட்ட அரங்குகளில் பல நாடகங்களை அரங்கேற்றி நடித்துள்ளார். 2001ஆம் ஆண்டு இலங்கை இந்து சமயப் பேரவையால் இவருக்கு கவிமணி என்ற பட்டம் சூட்டப்பட்டு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது. அத்தோடு இக் கவிஞர் யாழ் மாவட்ட மட்டத்திலும், தேசிய மட்டத்திலும் நடைபெற்ற பல கவிதைப் போட்டிகளில் முதலாம், இரண்டாம், மூன்றாம் பரிசுகளை பெர்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 63


வெளி இணைப்புக்கள்