ஆளுமை:குணராசா, கந்தையா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் குணராசா, கந்தையா.
பிறப்பு 1941.01.25
ஊர் வண்ணார்பண்ணை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

க.குணராசா (194.01.25 - ) யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர். இடைநிலைக் கல்வியை யாழ்.இந்துக்கல்லூரியில் கற்று இலங்கைப் பேராதனைப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் புவியியற்துறை விசேட கற்கைநெறி முதுகலைமாணி, கலாநிதிப் பட்டங்களை பெற்ற இவர் ஆரம்ப காலத்தில் பல்கலைக்கழகம், தொழில்நுட்பக் கல்லூரி, ஆசிரியற்பயிற்சிக் கலாசாலை, ஆகியவற்றில் கற்பித்தலை மேற்கொண்டவராவார். அத்தோடு இலங்கை நிர்வாக சேவைப் பரீட்சையில் தேறி உதவி அரச அதிபர். யாழ்ப்பாண பல்கலைக்கழக பதிவாளர், மாகாண அமைச்சின் திட்ட அபிவிருத்தி அதிகாரி பிரதேச செயலாளர், யாழ். மாநகர சபை ஆணையாளர் ஆகிய பதவிகளை வகித்து ஓய்வு பெற்றார்.

இவர் செங்கை ஆழியான் எனும் புனைபெயரில் உறவும் பிரிவும் (1964), தீக்குள் விரலை வைத்தால் (1972), மர்மப்பெண் (1974), கர்ப்பக் கிருகம் (1974), காகித ஓடம் (1974), சொர்க்கமும் நரகமும் (மாணிக்கம் இதழ்த் தொடர்), கனலும் புனலும் (மாணிக்கம் இதழ்த் தொடர்) போன்ற நூல்களை வெளியிட்டுள்ளார். இலக்கியச் செம்மல் பட்டம், புனைகதைப் புரவலர் விருது, ஆளுநர் விருது என்பவற்றை இவர் பெற்றுள்ளதோடு இவரது சிறுவர் இலக்கியத்திற்காக யாழ் இலக்கிய வட்டம் இவரைக் கௌரவித்துள்ளது. நாடகத்திற்காக அகில இலங்கை சைவப் புலவர் சங்கம் இவருக்கு தங்கப் பதக்கம் பரிசளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.


வளங்கள்

  • நூலக எண்: 300 பக்கங்கள் 165-167
  • நூலக எண்: 1002 பக்கங்கள் 03-156
  • நூலக எண்: 10304 பக்கங்கள் 06-07
  • நூலக எண்: 7571 பக்கங்கள் 51

வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:குணராசா,_கந்தையா&oldid=160764" இருந்து மீள்விக்கப்பட்டது