ஆளுமை:சச்சிதானந்தன், கார்த்திகேசு

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:22, 5 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சச்சிதானந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சச்சிதானந்தன் கார்த்திகேசு
தந்தை கார்த்திகேசு
பிறப்பு 30.03.1940
ஊர் கோண்டாவில்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கா.சச்சிதானந்தன் (1940.03.30 - ) யாழ்ப்பாணம் கோண்டாவிலைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர். இவரது தந்தை பெயர் கார்த்திகேசு. ஆரம்ப கல்வியை இணுவில் சைவ மகாஜன வித்தியாலயத்திலும், இடைநிலைக் கல்வியை நாவலப்பிட்டி கதிரேசன் கல்லூரியிலும், கொக்குவில் இந்துக் கல்லூரியிலும் கற்று சித்தியடைந்த இவர் பட்டப்படிப்பை வெளிவாரியாக வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் பயின்றார்.

புனைகதை, நாடகம், ஆய்வுக்கட்டுரை, இலக்கியவிமர்சனம் ஆகிய துறைகளில் ஆற்றல் மிக்க ஜனரஞ்சக எழுத்தாளரான இவர் கே.எஸ்.ஆனந்தன் எனும் பெயரில் ஈழத்து இலக்கியத்துறையில் நுழைந்தவர். இவரின் சிறுவர் இலக்கியத்திற்காக யாழ் இலக்கியவட்டம் இவரை கௌரவித்துள்ளது. அத்தோடு நாடகத்திற்காக அகில இலங்கை சைவப் புலவர் சங்கம் இவருக்கு தங்கப்பதக்கம் பரிசளித்தது. இவர் தமிழக முன்னணிப் பத்திரிகைகளான கல்கி, கலைமகள், ஆனந்தவிகடன், குமுதம் முதலாக ஈழத்துச் சஞ்சிகைகள் பத்திரிகைகளிலும் ஆக்கங்களை வெளியிட்டுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 49


வெளி இணைப்புக்கள்