பகுப்பு:அறம் வளர் இளந் தமிழ்

நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:49, 3 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

'அறம் வளர் இளந் தமிழ்' என்ற இதழ் 1990களில் ஈழத்தில் வெளிவந்த சிறுவர்களுக்கான காலாண்டு இதழாகும். இது யாழ்ப்பாணம் புலோலி 'விநாயகர் தர்ம நிதியத்தினரின்' ஓர் இலவச வெளியீடு. முதலாவது இதழ் 1992.07.14அன்று வெளிவந்தது. இதழின் ஆசிரியர் வ.ச.செல்வராசா. சிறுவர்களை நல்வழிப்படுத்துகின்ற வகையிலான அறம்பற்றிய சிந்தனைகள், அறிவியல் துணுக்குகள், அறிஞர்களது வரலாறு, சமயம், மொழி பற்றிய கட்டுரைகள், சிறுகதைகள், பாடல்கள் என்பவற்றைத் தாங்கி வெளிவந்தது.