ஆளுமை:சபாரத்தினம், மு.
பெயர் | சபாரத்தினம், மு. |
பிறப்பு | 1921 |
இறப்பு | 1967 |
ஊர் | திருநெல்வேலி |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
தாழையடி சபாரத்தினம் என்று அழைக்கப்பட்ட மு. சபாரத்தினம் (1921 - 1967) யாழ்ப்பாணம் திருநெல்வேலியைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் எழுத்தாளர். கல்கி என்னும் தென்னிந்திய சஞ்சிகையின் சிறுகதைப் போட்டியொன்றில் கலந்து மூன்றாவது பரிசினைப் பெற்றதன் மூலம் இவர் ஈழத்து இலக்கியத்தில் நுழைந்து கொண்டார். ஈழத்துச் சிறுகதைகள் தொகுப்பில் இவர் எழுதிய குருவின் சதி என்ற நூல் குருபக்தி நிறைந்த வேடுவன் கதையாக இருந்தாலும் அதன் நடையும் புதுவித பார்வையும் சிறப்பானவை ஆகும்.
சிந்திக்கத் தொடங்கினான், எனக்கும் உனக்கும், தெரிந்தால் போதும், தாய் ஆகிய சிறுகதைகளை இவர் புதினம் பத்திரிகையில் எழுதியுள்ளதோடு ஊமைநாடகம், ஓடமும் வண்டியும், வண்டிக்காரன், நினைவு முகம், வற்றாத ஊற்று, ஷேட், சைக்கிள், சக்கரம் முதலான சிறுகதைகளையும் இவர் எழுதியுள்ளார். இவரின் சிறுகதைகளின் தொகுப்பாக புதுவாழ்வு நூலுருவில் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வளங்கள்
- நூலக எண்: 300 பக்கங்கள் 72
- நூலக எண்: 7571 பக்கங்கள் 37