ஆளுமை:தில்லைச்சிவன், தில்லையம்பலம்
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:44, 30 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | தில்லைச்சிவன் |
தந்தை | தில்லையம்பலம் |
தாய் | பொன்னம்மையார் |
பிறப்பு | 1928.01.05 |
இறப்பு | 2004.11.26 |
ஊர் | சரவணை |
வகை | புலவர்கள் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
தி.சிவசாமி (தில்லைச்சிவன் 1928 தை, 05) சரவணையூரைச் சேர்ந்தஓர் புலவர். இவரது தந்தையார் பெயர் தில்லையம்பலம், தாயார் பெயர் பொன்னம்மையார். இவர் யாழ் ஸ்ரான்லி மத்திய மகாவித்தியாலயத்தில் பயின்ற மாணவராவார். இவர் ஆசிரியராகவும், அதிபராகவும் பணி புரிந்துள்ளார்.
இவர் தனது பதினெட்டாவது வயதில் 1946ஆம் ஆண்டு மறுமலர்ச்சி பத்திரிகையில் பட்டணத்து மைச்சினி எனும் கவிதையை எழுதி கவிதை உலகில் காலடி பதித்தார். இவரது கவிதைகள் வீரகேசரி, முகிழ்த்தது முகில், மின்னொளி, வீரன் போன்ற பல பத்திரிகைகளில் வெளியாகின. தீவிர தமிழரசு தொண்டனாகவும் காணப்பட்டார். இவரது பக்திக்கு எடுத்துக்காட்டாக பள்ளம் புலத்து முருகன் பேரில் ஒரு பதிகமும், ஐயனார் பேரில் ஐயனார் அருள் வேட்டலும் திருவூஞ்சலும் என்ற நூலும் இவரால் பாடப்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
வளங்கள்
- நூலக எண்: 4640 பக்கங்கள் 270-273
- நூலக எண்: 7571 பக்கங்கள் 19