ஆளுமை:நடராசா, செல்லப்பா
பெயர் | நடராசா செல்லப்பா |
தந்தை | செல்லப்பா |
பிறப்பு | 1930.05.10 |
இறப்பு | 2013.07.08 |
ஊர் | கோண்டாவில் |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
செ.நடராசா (1930.05.10 - 2013.07.08) யாழ்ப்பாணம் கோண்டாவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் எழுத்தாளர், ஊடகவியலாளர். இவரது தந்தையார் பெயர் செல்லப்பா. 1947ஆம் ஆண்டிலிருந்து ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக இவர் எழுத்துலகில் ஈடுபட்டு வந்தார். 1954ஆம் ஆண்டு கொழும்பு ஏரிக்கரைப் பத்திரிகை நிறுவனமான தினகரன் அலுவலகப் பத்திரிகையாளராக தனது பணியைத் தொடங்கினார். இக் காலத்தில் கட்டுரைகள், செய்திகள், விமர்சனங்கள், வர்ணனைகள் எழுதுவதில் தனது திறமைகளை காட்டி லேக்ஹவுஸ் ஆசிரியர் குழுவில் பல பரிசில்களை வென்றார். பின்னர் 1961ஆம் ஆண்டு முதல் 1989ஆம் ஆண்டு வரை இலங்கை பாராளுமன்றத்தில் அறிக்கையாளராக, சிரேஷ்ட அறிக்கையாளராக சேவைபுரிந்து 1989ஆம் ஆண்டுடன் ஓய்வுப் பெற்றார்.
பாராளுமன்ற சம்பிரதாயங்கள் நடைமுறைகள் பற்றி இவர் எழுதிய கட்டுரைகளை தொகுத்து எனது நோக்கில் இலங்கைப் பாராளுமன்றம் என்னும் நூலாக கொழும்புத் தமிழ்ச் சங்கம் பத்தாவது தடவையாக 19886ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. பின்னர் 1988ஆம் அண்டு அகில இலங்கை சமாதான நீதவானாக நீதி அமைச்சினால் நியமிக்கப்பட்டார். இலங்கை பாராளுமன்றம் என்ற இவரது நூலுக்கு இலங்கை பத்திரிகையாளர் சங்கம் இரண்து தங்க பதக்கங்கள் அணிவித்து கௌரவித்தது. இவர் பல கோவில்களின் கும்பாபிஷேக மலர்களை எழுதி வெளியிட்டு தனது ஆற்றலை வெளிப்படுத்தி இருக்கின்றார்.
வளங்கள்
- நூலக எண்: 7571 பக்கங்கள் 16