ஆளுமை:கனகராசா, கந்தையா

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:53, 29 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=கனகராசா கந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கனகராசா கந்தையா
தந்தை கந்தையா
பிறப்பு 1927.11.02.
இறப்பு 1998.07.22.
ஊர் வண்ணார்ப்பண்ணை
வகை சமூக சேவகர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

க.கனகராசா (1927.11.02 - 1998.07.22) யாழ்ப்பாணம் வண்ணர்ப்பண்ணையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் சமூக சேவையாளர். இவரது தந்தையார் மில்க்வைற் சவர்க்காரத் தொழிலகத்தின் ஸ்தாபகர் வீ.மு.கந்தையா ஆவார். இவர் தனது தந்தையாருக்குப் பின் மில்க்வைற் சவர்க்காரத் தொழிலகத்தின் அதிபராக விளங்கினார். அத்தோடு சமூகச் செயற்பாடு, சமயச் செயற்பாடு மற்றும் தமிழர் கலை கலாசார விழுமியங்கள், பண்பாடு என்பவற்றை காப்பதில் முன்னின்று செயற்பட்டார்.

பனையென்னும் மரத்தின் பயனை தமிழர்களாகிய நாம் பாதுகாத்து செய்ற்பட வேண்டும் என்னும் முக்கியத்துவத்தை எடுத்து மக்கள் முன் சமர்பிக்க அயராது உழைத்த இவர் மில்க்வைற் செய்திகள் என்ற பத்திரிகை வடிவிலான செய்தி இதழை வெளியிட்டு வந்தார். அத்தோடு பனைவளம் மட்டுமல்லாது, முருங்கை, பப்பாசி, வேம்பு, துளசி, குரக்கன் போன்ற தாவரங்களை வளர்க்கவும், மருந்து தேவைகளுக்காக மூலிகைச் செடிகளை வளர்க்கவும் பல பிரசுரங்களை இவர் வெளியிட்டார். இச் சேவையைப் பாரட்டி சமூக மக்களால் பூலோக கற்பகதரு நாயகர், தாலகாவலர் என்ற பட்டங்களை இவர் பெற்றதோடு சிவநெறிப்புலவர், சிவதர்ம வள்ளல், செந்தமிழ்ச் செல்வர், திருக்குறட் காவலர் ஆகிய பட்டங்களையும் பெற்றார்.

இடம்பெயர் காலங்களிலும் நிறைவான மக்கள் சேவையை நன்றாக செய்த இவருக்கு தேசாபிமானி என்ற பட்டத்தை நிறுவனமொன்று வழங்கி கௌரவித்தது. அத்தோடு சமாதன நீதவானாகவும் கடமையாற்றிய இவரை பாராட்டி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் கௌரவ கலாநிதிப்பட்டம் வழங்கி கௌரவித்தது.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 15
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:கனகராசா,_கந்தையா&oldid=160284" இருந்து மீள்விக்கப்பட்டது