ஆளுமை:ஞானமுத்து, வேலாயுதம்

நூலகம் இல் இருந்து
Thapiththa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:33, 29 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=ஞானமுத்து, ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஞானமுத்து, வேலாயுதம்
தந்தை வேலாயுதம்
பிறப்பு 1924.03.04
இறப்பு 1997.05.21
ஊர் பழுகாமம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வேலாயுதம் ஞானமுத்து கிழக்கிலங்கையின் மட்டக்களப்பிலே பழுகாமம் எனும் இடத்திலே வேலாயுதத்தின் மகனாக 1924 மார்ச், 04ம் திகதி பிறந்தார்.

பழுகாமம் மெதடிஸ் மிசன் பாடசாலை, மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலயம், திருகோணமலை இந்துக் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்ற இவர் கொழும்பு திறந்த வெளி பல்கலைக்கழகத்திலும் கற்றிருந்தார். இவர் தனது 71 வயதில் கனடா ரொரன்ரோ யோர்க் பல்கலைக்கழகத்திக் கற்று பீ.ஏ. பட்டம் பெற்றார்.

ஆரம்பத்தில் காங்கேசன்துறை சீமெந்துக் கூட்டுத்தாபனத்தில் எழுதுவினைஞராக பணியாற்றிய இவர் பின் உதவி அரசாங்க அதிபர் என்றா பதவி நிலையில் பணி செய்து ஓய்வு பெற்றார். இவர் இலக்கிய அமைப்புக்கள், கல்விசார் அமைப்புக்கள், சமய அமைப்புக்கள், அரசியல் அமைப்புக்கள் ஆகியவற்றில் இணைந்து பணி செய்துள்ளார்.

இவர் மோகன் ஜோவி என்ற புனை பெயரில் பத்திரிகைகளில் சமுக நலக் கட்டுரைகளையும், உணர்வூட்டுங் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவர் 1997 மே, 21ம் திகதி கனடாவில் காலமானார்

வளங்கள்

  • நூலக எண்: 3771 பக்கங்கள் 170-171