ஆளுமை:முத்தையா, க. பே.

நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:55, 29 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் முத்தையா, க. பே.
பிறப்பு 1914.08.31.
இறப்பு 1964.05.26.
ஊர் உடுதுறை, வல்வெட்டித்துறை
வகை
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

க. பே. முத்தையா (1914.08.31 -1964.05.26) யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உடுதுறையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆசிரியர், இலக்கிய ஆர்வலர், பத்திரிகையாளர், நற்செய்தித் திருத்தொண்டர், தொழிற்சங்கவாதி. இவர் நல்லூர் சாதனா பாடசாலையில் தலமையாசிரியராக இருந்த காலத்தில் நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் வாழ்ந்து வந்தார். தனது ஐம்பதாவது வயதில் நல்லூர் சாதனா பாடசாலையின் தலமை ஆசிரியராக கடமையாற்றிய காலத்திலேயே காலமானார்.

யாழ் மாவட்ட சனசமூக நிலையங்களின் சமாச வெளியீடான “சமூகத்தொண்டன்” மாத இதழுக்கு இவர் ஆசிரியராக இருந்து செயற்பட்டதோடு 1948-1954 காலப்பகுதியில் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரித் தமிழ் பாடசாலை தலைமையாசிரியராக பணியாற்றினார். சமூகத்தொண்டன் மாத இதழின் மூலம் பல புதிய இளம் எழுத்தாளர்களை இனங்கண்டு இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்தினார். பல பேச்சாளர்களை உருவாக்கிய பெருமையும் இவருக்குண்டு. உடுத்துறை திருச்சபையின் “விசித்திர சரித்திரம்”, “பாலர் நேசன்” பத்திரிகை ஆகியவற்றின் ஆசிரியராக விளங்கினார்.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 11


வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:முத்தையா,_க._பே.&oldid=160233" இருந்து மீள்விக்கப்பட்டது