ஆளுமை:சபாரத்தின முதலியார், சபாபதிப்பிள்ளை
நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:51, 29 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Pirapakar, ஆளுமை:சபாரத்தினமுதலியார், ச. பக்கத்தை ஆளுமை:சபாரத்தின முதலியார், சபாபதிப்பிள்ளை என்ற ...)
பெயர் | சபாரத்தின முதலியார், சபாபதிப்பிள்ளை |
தந்தை | சபாபதிப்பிள்ளை |
பிறப்பு | 1858 |
இறப்பு | 1922 |
ஊர் | கொக்குவில் |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ச. சபாரத்தின முதலியார் (1858 - 1922) யாழ்ப்பாணம் கொக்குவிலைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். ஆறுமுகநாவலரிடம் கல்விகற்றுள்ளார். இவர் கச்சேரியில் இலிகிதராகப் பல ஆண்டுகள் கடமையாற்றியவர். இராசவாசல் முதலியார் எனவும் அழைக்கப்பட்டார்.
இவர் கண்டனங்கள், சமய நூல்கள், தனிப்பாடல்கள் பலவற்றை எழுதியதுடன் தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தும் உள்ளார். முன்னை நாதசுவாமி வடிவழகம்மை ஆசிரிய விருத்தம், கிருபாகர சிவசுப்பிரமணிய சுவாமி தோத்திரம், மும்மணிக் கோவை, வெண்பா, அந்தாதி, கந்தர் கலிப்பா, சரவணபவமாலை, நல்லை நான்மணி மாலை, கொக்குவில் சித்திவிநாயகர் இரட்டை மணிமாலை முதலிய பல செய்யுள்களையும் இயற்றியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 3003 பக்கங்கள் 157-159
- நூலக எண்: 7571 பக்கங்கள் 05