நிறுவனம்:யாழ்/ வண்ணை வைத்தீஸ்வரன் கோயில்

நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:58, 29 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{நிறுவனம்| பெயர்=யாழ்/ வண..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ வண்ணை வைத்தீஸ்வரன் கோயில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் வண்ணார்பண்ணை
முகவரி காங்கேசன்துறை வீதி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

வண்ணை வைத்தீஸ்வரன் கோயில் இலங்கையின் வடக்கே அமைந்த யாழ்ப்பாண மாவட்டத்தில் நகரை அண்டிய வண்ணார்பண்ணை எனும் ஊரில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் இறைவன் பெயர் வைத்தீஸ்வரன். இறைவி பெயர் தையல் நாயகி. இக்கோயில் செட்டியார் சிவன் கோயில் எனவும் பட்டணத்துச் சிவன் கோயில் எனவும் அழைக்கப்படுகின்றது.

1790ஆம் ஆண்டளவில் இந்தியாவிலிருந்து வருகை தந்த வைத்தீஸ்வரச் செட்டியாரால் கூழாங்கைத்தம்பிரான் முதலான சான்றோர்களின் துணையுடன் ஆகம விதிப்படி இக்கோயில் அமைக்கப்பட்டது. வைத்தீஸ்வரருக்கு கிழக்கு நோக்கிய கருவறையும் தையல்நாயகிக்கு தெற்குநோக்கிய கருவறையுமாக அழகிய சிற்பங்கங்களுடன் கூடிய விமானங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. ஆலயத்தின் 2ஆவது சுற்றுப்பிரகாரத்தில் சித்தாமிர்த புட்கரணி என்ற புனித தீர்த்தமும் அமையப்பெற்றது.

இவ் ஆலயத்தில் தினமும் ஆறுகால பூஜைகள் இடம்பெறுவதோடு பங்குனி உத்தர நாளில் தீர்த்த உற்சவம் அமையும் வகையிலான மகோற்சவமும் விமர்சையாக இடம்பெறுகின்றது.

வளங்கள்

  • நூலக எண்: 5274 பக்கங்கள் 1-10

வெளி இணைப்பு