ஆளுமை:இராசரத்தினம், கணபதி

நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:44, 28 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இராசரத்தினம், க.
பிறப்பு 1927
ஊர் யாழ்ப்பாணம்
வகை ஓவியவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த க.இராசரத்தினம் அவர்கள் ஓர் ஓவியக் கலைஞன் மட்டுமல்லது ஒரு நாடக ஆர்வலரும் ஆவார். சென்னை ஓவியக் கல்லூரியில் ஓவியப் பயிற்சி பெற்ற இவர் யாழ்ப்பாணத்தின் முன்னோடி ஓவிய அமைப்பான வின்சர் கலைக் கழகத்தில் இணைந்து செயற்பட்டார். இவரால் எழுதப்பட்ட மெய்யுரு பற்றிய நூல், தேர்ச்சிபெற்ற கலைஞனுக்கு உத்திநுட்ப திறனுடன் இருக்க வேண்டிய கலை, வரலாற்று விமர்சன அறிவிற்கு ஓர் எடுத்துக் காட்டாகும்.

இவரது பிரதிமை ஓவியங்கள் உயிரோட்டமுடைய ஆக்கங்களாகும். பிரதிமை ஓவியம், ஓவியத்தொடுப்பமைவு, நீர்வண்ணப்பிரயோகம் போன்றனவற்றில் இவர் சிறப்புத் தேர்ச்சி பெற்றவர். இரு பரிமாணச் சட்டத்தில் முப்பரிமாணத்தைக் கொண்டுவரும் இவரது ஓவியங்கள் அனைத்திலும் பச்சைவர்ணப் பிரயோகம் முதன்மை பெறுகிறது.

வளங்கள்

  • நூலக எண்: 2970 பக்கங்கள் 27


வெளி இணைப்புக்கள்