ஆளுமை:சற்குணம், மயில்வாகனம்

நூலகம் இல் இருந்து
Thapiththa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:33, 28 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சற்குணம், ம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சற்குணம், மயில்வாகனம்
தந்தை மயில்வாகனம்
தாய் தங்கச்சிப்பிள்ளை
பிறப்பு 1941.11.10
இறப்பு 1981
ஊர் காரைதீவு, அம்பாறை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மயில்வாகனம் சற்குணம் அம்பாறை மாவட்டத்தின் காரைதீவிலே மயில்வாகனம், தங்கச்சிப்பிள்ளை தம்பதியரின் மகனாக 1941 நவம்பர், 10ல் பிறந்தார். காரைதீவு மத்திய மகாவித்தியாலயத்திலும், மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயத்திலும் ஆரம்பக் கல்வியைப் பெற்றுக்கொண்ட இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்திலும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் மேற்படிப்பைப் பெற்றுக் கொண்டார்.

பேராதனைப் பல்கலைக்கழக உதவி தமிழ் விரிவுரையாளராகவும், மன்னார் மாவட்ட சனசமூக நிலைய உத்தியோகத்தராகவும், மட்டக்களப்பு மாவட்டச் சனசமூக நிலைய ஆய்வு அதிகரியாகவும், நவகிரிநகர் கிராம சபையின் விசேட ஆணையாளராகவும் பதவி வகித்துள்ளார். இவர் ஆய்வுக் கட்டுரைகள், நூல்கள், மலர்கள் என்பவற்றை எழுதி வெளியிட்டுள்ளார். கலைகளில் ஏற்பட்ட ஆர்வத்தினால் கூத்துக்கலை வளர்ச்சிக்கு பொறுப்பாளராக இருந்து நெறிப்படுத்தியவர்.

வளங்கள்

  • நூலக எண்: 3771 பக்கங்கள் 152-153