ஆளுமை:வேலுப்பிள்ளை, த.

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:55, 27 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=வேலுப்பிள்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வேலுப்பிள்ளை, த.
பிறப்பு
ஊர் யாழ்ப்பாணம்
வகை ஓவியவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கரவைவேலவன் என்ற புனைப்பெயரைக் கொண்ட த.வேலுப்பிள்ளை அவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஓர் ஓவியர். இவர் 1974ஆம் ஆண்டில் ஓவியம் என்ற நூலை எழுதி வெளியிட்டதம் மூலம் பரவலாக அறிமுகமானார். இந்நூல்; கரவெட்டி மக்கள் ஒன்றியத்தின் வெளியீடாக வெளிவந்துள்ளது.

இவரது அபிப்பிராயப்படி ஓவியம் ஓர் உலகமொழியாகும். ஓவியத்தைப் பொறுத்தவரையில் மேலைத்தேய உத்திமுறைகளை கீழைத்தேய உள்ளத்துணர்வுடனும், ஆக்கச்சக்தியுடனும், இணைப்பதன் மூலம் உயிரோட்டமான ஓவியங்களை வரையலாமென்பது இவரது கருத்தாகும். புகைப்படக் கருவியால் எண்ணங்களை படம் பிடித்துக் காட்ட முடியாது. ஓவியமே அதனைச் செய்யும் எனக்கருதும் இவர் கரவைவேலன், கந்தமுருகேசரின் பிரதிமை, வள்ளுவர், காதல், எல்லையில்லா ஆனந்தம், முருகன், விநாயகர், இயற்கைக் காட்சி எனப்பல தைலவர்ண ஓவியங்களை இவர் வரைந்தார் என அறியக்கிடக்கின்றது. எனினும் இவ்வோவியங்கள் மூலப் பிரதிகள் எவையும் பார்வைக்கு கிடைக்கவில்லை.

வளங்கள்

  • நூலக எண்: 2970 பக்கங்கள் 16-17


வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:வேலுப்பிள்ளை,_த.&oldid=159946" இருந்து மீள்விக்கப்பட்டது