ஆளுமை:இராசரத்தினம், வஸ்தியாம்பிள்ளை
நூலகம் இல் இருந்து
Thapiththa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:29, 24 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | இராசரத்தினம், வ. அ. |
தந்தை | வஸ்தியாம்பிள்ளை |
தாய் | அந்தோனியா |
பிறப்பு | 1925.06.05 |
இறப்பு | 2001.02.22 |
ஊர் | மூதூர், திருகோணமலை |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
வ. அந்தோனி இராசரெத்தினம் கிழக்கிலங்கையின் திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் எனும் இடத்தில் வஸ்தியாம்பிள்ளை, அந்தோனியா ஆகியோருக்கு 1926 ஜூன், 05ல் பிறந்த புகழ் பெற்ற ஈழத்து சிறுகதை, நாவல் எழுத்தாளராவார்.
சுருக்கமாக வ. அ. என அறியப்படுபடும் இவர் ஈழநாகன், கீழக்கரை தேவநேயப் பாவாணர், வியாகேச தேசிகர் என்னும் பல புனைபெயர்களிலும் எழுதியுள்ளார்.
இவர் மூதூர் கத்தோலிக்க பாடசாலையில் கல்வி கற்று மட்டக்களப்பு அரசினர் ஆண்கள் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் ஆசிரிய பயிற்சி பெற்று ஆசிரியராகவும், அதிபராகவும் பணியாற்றியுள்ளார். இவரது இலக்கிய, வரலாற்று ஆய்வுக்கட்டுரைகள், கதைகள், விமர்சனங்கள் தினகரன், வீரகேசரி, சுதந்திரன் தினபதி, சிந்தாமணி முதலிய இலங்கைப் பத்திரிகைகளில் வெளிவந்தன.
வளங்கள்
- நூலக எண்: 300 பக்கங்கள் 104-107
- நூலக எண்: 3771 பக்கங்கள் 131