நிறுவனம்:யாழ்/ அளவெட்டி சதானந்தா வித்தியாலயம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:53, 23 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{நிறுவனம்| பெயர்=யாழ்/ அள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ அளவெட்டி சதானந்தா வித்தியாலயம்
வகை பாடசாலைகள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் அளவெட்டி
முகவரி அளவெட்டி, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

அளவெட்டி சதானந்தா வித்தியாலயம் யாழ்ப்பாண மாவட்டத்தில் அளவெட்டி பிரதேசத்தில் அமைந்துள்ளது. காலஞ்சென்ற பொன்னப்பா காசிப்பிள்ளை அவர்களாலும் மற்றும் பெரியோர்களலும் 1930ஆம் அண்டு வைகாசி மாதம் சதானந்தயோகியாரின் பெயரைக் கொண்டு இப் பாடசாலை நிறுவப்பட்டது. இதற்கான கட்டிடத்தை செ.நாகலிங்கம் ஏனையோரின் உதவியுடன் அமைத்தார். வீ.நடராசன் என்பவரே இங்கு முதற் தலைமையாசிரியராக கடமையாற்றினார்.

01.08.1932ஆம் ஆண்டு இப் பாடசாலை அரச நன்கொடை பெறும் பாடசாலையாக பதிவு செய்யப்பட்டது. ஆரம்பகாலத்திலிருந்தே இப் பாடசாலை சிரேட்ட பாடசாலையாக விளங்கியது. இப் பாடசாலையில் சமயக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்ததோடல்லாமல் தொழிற்கல்விக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

1955ஆம் ஆண்டில் இப் பாடசாலையில் வெள்ளி விழா கொண்டாடப்பட்டு பாடசாலையின் திறமைமிக்க செயற்பாடுகளை வெளிப்படுத்தும் முகமாக வெள்ளிவிழா மலர் ஒன்றும் வெளியிடப்பட்டது. அத்தோடு மூ.நடராசா அவர்கள் அதிபராக இருந்த காலகட்டங்களில் இப் பாடசாலையின் பொன்விழா, புதிய கட்டடத் திறப்பு விழா, பரிசளிப்பு விழா போன்றவற்றை செவ்வனே நடத்தி வந்தார்.

வளங்கள்

  • நூலக எண்: 13940 பக்கங்கள் 106-107