ஆளுமை:நமசிவாயம், இ.

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:12, 23 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=நமசிவாயம், ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நமசிவாயம், இ.
பிறப்பு 1915
ஊர் மயிலிட்டி
வகை கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இலக்கண வித்தகர் இ.நமசிவாயம் அவர்கள் யாழ்ப்பணம் மயிலிட்டி தெற்க்கைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் கல்வியியலாளர். இவர் வித்துவ சிரோமணி சி.கணேசையரின் முதல் மாணவர் ஆவார். யாழ்ப்பாணத்துக் கணேசையர் கல்லூரியில் கல்விப்பாரம்பரியத்தின் இலக்கணச் செம்மையைப் பலருக்கும் ஊட்டி வந்துள்ள இவர் வீமன்காமம் வித்தியாலயத்தில் தழிழ்ப் பேராசானாகவும் தலைமையாசிரியராகவும் கடமையற்றியவர்.

மல்லாகம் பண்டித மாணவர் கழகத்தில் கற்பித்து பல பண்டிதர்களை உருவாக்கிய இவருக்கு 19.03.2000ஆம் அன்று நல்லையாதீனத்தில் சதாபிஷேகமும், துர்க்காமணி மண்டபத்தில் யாழ் பல்கலைக்கழக உபவேந்தர் பாலசுந்தரம்பிள்ளை அவர்கள் தலைமையில் பாராட்டுவிழாவும் நடைபெற்றது. அத்தருணத்தில் இவரைப்பற்றிய “தேசிகம்” எனும் நூலும் இவரது ஆக்கங்களைக் கொண்ட “வித்தகர் தரிசனம்” எனும் நூலும் வெளியிடப்பட்டன.

சந்நிதிக்கந்தன் சதகம், மாவைக்கந்தன், நகுலேசர் திருவந்தாதி முதலான பல நூல்களை இவர் எழுதியுள்ளார். இவருக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் “இலக்கணவித்தகர்” பட்டத்தையும், யாழ்ப்பாணம் ஆரியதிராவிட பாஷா அபிவிருத்திச்சங்கம் “வித்துவசிரோமணி” என்ற பட்டத்தையும் வழங்கி கௌரவித்துள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 13940 பக்கங்கள் 105


வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:நமசிவாயம்,_இ.&oldid=159606" இருந்து மீள்விக்கப்பட்டது