நிறுவனம்:யாழ்/ காங்கேசன்துறை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:51, 22 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{நிறுவனம்| பெயர்=யாழ்/ கா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ காங்கேசன்துறை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை
வகை பாடசாலைகள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் காங்கேசன்துறை
முகவரி காங்கேசன்துறை, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

காங்கேசன்துறை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை யாழ்ப்பாண மாவட்டத்தில் காங்கேசன்துறையில் அமைந்துள்ளது. 1882ஆம் ஆண்டு திரு.வேறட் பொன்ட் என்னும் கிறிஸ்தவப் பாதிரியால் இப் பாடசாலை ஒரு சிறு ஓலைக் கொட்டிலாக ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் இப் பாடசாலையில் 06 பிள்ளைகளுக்கு இரு ஆசிரியர்கள் கல்வி பயின்றனர்.

1960ஆம் ஆண்டுகளில் 10 ஆசிரியர்களுடன் 10ஆம் தரம் வரை வகுப்புக்கள் இருந்தன. இவ்வாறு இப் பாடசாலை முன்னேற்றத்திற்கு திரு.வ.சிங்கராசா, திரு. ஞா.பக்திநாதர், ஆகிய அதிபர்கள் முழுமூச்சுடன் உழைத்திருக்கிறார்கள்.

1962ஆம் ஆண்டு இப் பாடசாலையை அரசாங்கம் பொறுப்பேற்றது. அக்கால அரசாங்கக் கொள்கைப்படி பாடசாலை 5ஆம் வகுப்புக்கு மேல் இயங்க முடியாது போய் விட்டது. பின்னர் 1976ஆம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து 1978ஆம் ஆண்டு காலப்பகுதி வரை பாடசாலை புணர்நிர்மானிக்கப்பட்டு 1976ஆம் ஆண்டு தொடக்கம் இப் பாடசாலை 150க்கும் மேற்ப்பட்ட மாணவர்களையும் 5 ஆசிரியர்களையும் 5 வகுப்புக்களையும் கொண்டு சகல வசதிகளும் கொண்ட முழுப் பாடசாலையாக இயங்கி வந்தது.

வளங்கள்

  • நூலக எண்: 13940 பக்கங்கள் 71-72