நிறுவனம்:யாழ்/ தெல்லிப்பளை சைவப்பிரகாச வித்தியாலயம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:08, 22 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{நிறுவனம்| பெயர்=யாழ்/ தெ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ தெல்லிப்பளை சைவப்பிரகாச வித்தியாலயம்
வகை பாடசாலைகள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் தெல்லிப்பளை
முகவரி தெல்லிப்பளை கிழக்கு, தெல்லிப்பளை, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

யாழ்/ தெல்லிப்பளை சைவப்பிரகாச வித்தியாலயமானது யாழ்ப்பாணத்தில் தெல்லிப்பளை பிரதேசத்தில் அமைந்துள்ளது. 1900ஆம் ஆண்டு க.சுந்தரமூர்த்தி ஐயர் அவர்கள் கிறிஸ்தவ சூழலில் படித்த மாணவர்களுக்கு தமிழறிவும், சைவ உணர்ச்சியும் உண்டாகுமாறு தமது இல்லத்திற்கு அருகே ஒரு சிரு மண்டபம் அமைத்து பாடசாலை நடத்தி வந்தார். எனவே இப் படசாலை ஐயர் படசாலை என வழங்கி வருகிறது.

1901ஆம் ஆண்டு இப் பாடசாலை உதவி நன்கொடைப் பெறும் பாடசாலையாக பதிவு செய்யப்பட்டதோடு 1902ஆம் ஆண்டில் முதல் வருடாந்த பரீட்சையும் நடைப்பெற்றது. பின்னர் 1931ஆம் ஆண்டுகளில் 6ஆம் வகுப்பு தொடக்கம் 1943ஆம் ஆண்டு S.S.C. வகுப்பு வரை நடத்தப்பட்டது.

இப் பாடசாலையில் 1943இல் புதிய மண்டபத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டு நிதி நிலை காரணமாக 1947.07.04ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது. 1952ஆம் ஆண்டுகளில் நிறுவகர் நினைவாக பாலர் பகுதிக் கட்டிடமும் ஆரம்பிக்கப்பட்டது. அத்தோடு இதே ஆண்டில் ஒக்டோபர் 4ஆம் திகதி இப் பாடசாலையின் பொன் விழாவும், 1960ஆம் அண்டு மே மாதத்தில் வச்சிர விழாவும் கொண்டாடப்பட்டது.

வளங்கள்

  • நூலக எண்: 13940 பக்கங்கள் 68-70