நிறுவனம்:யாழ்/ குரும்பசிட்டி பொன் பரமானந்தர் வித்தியாலயம்
பெயர் | யாழ்/ குரும்பசிட்டி பொன்பரமானந்தா வித்தியாலயம் |
வகை | பாடசாலைகள் |
நாடு | இலங்கை |
மாவட்டம் | யாழ்ப்பாணம் |
ஊர் | குரும்பசிட்டி |
முகவரி | குரும்பசிட்டி, யாழ்ப்பாணம் |
தொலைபேசி | |
மின்னஞ்சல் | |
வலைத்தளம் |
யாழ்/ குரும்பசிட்டி பொன்பரமானந்தா வித்தியாலயமானது யாழ்ப்பாண மாவட்டத்தின் குறும்பசிட்டி பிரதேசத்தில் அமைந்துள்ளது. 1900ஆம் ஆண்டு பொன்.பரமானந்தர் அவர்களால் இப் பாடசாலை அமைக்கப்பட்டதோடு 1902ஆம் ஆண்டு இது உதவி நன்கொடைப் பெறும் பாடசாலையாக பதிவு செய்யப்பட்டது.
குரும்பசிட்டி தமிழ் கலவன் பாடசாலை என மலர்ந்த இப் பாடசாலை மக்களால் மகாதேவ வித்தியாசாலை என அழைக்கப்படது. 1970ஆம் ஆண்டில் பொன்.பரமானந்தர் வித்தியாலயம் எனப் பெயர் மாற்றப்பட்டது. 1980இல் இருந்து பொன்.பரமானந்தர் மகா வித்தியாலயமாக உயர்ந்து நின்றது. ஆரம்பநாள் முதல் 40 ஆண்டுகள் நிறுவகர் பொன்.பரமானந்தர் இதன் அதிபராக விளங்கினார். இவர் பாலர் வகுப்பு முதல் மாணவர் ஆசிரியர் வகுப்புகள் வரை ஏற்ப்படுத்தி இப் பாடசாலையை உயர் கல்வி நிறுவனமாக உயரச் செய்தார்.
01.05.1962ஆம் ஆண்டில் இப் பாடசாலை அரசுடமையாக்கப்பட்டது. 1958 - 1978ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் புதிய கட்டிடமொன்றை பெற்றோர் ஆசிரியர் சங்கமும், மேல் மாடிக் கட்டிடத்தை அரசும் நிறுவிக் கொடுத்தது.
வளங்கள்
- நூலக எண்: 13940 பக்கங்கள் 66-67