நிறுவனம்:யாழ்/ மாதகல் சென் தோமஸ் றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலை

நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:55, 21 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ மாதகல் சென் தோமஸ் றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலை
வகை பாடசாலைகள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் மாதகல்
முகவரி மாதகல், யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

மாதகல் சென் தோமஸ் றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலை யாழ்ப்பாண மாவட்டத்தில் மாதகலில் அமைந்துள்ளது. றோமன் கத்தோலிக்க திருச்சபையால் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் ஏறக்குறைய 1880ம் ஆண்டளவில் கொட்டில் ஒன்றில் பெண்பிள்ளைகளுக்கென ஆரம்பிக்கப்பட்ட இப் பாடசாலை 1893ஆம் தொடக்கம் புனிததோமையார் றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலை எனும் பெயரில் திருக்குடும்ப சபைக் கன்னியர்களால் பொறுப்பேற்று நடத்தப்பட்டது.

1961ஆம் ஆண்டு அரசு இப்பாடசாலையை பொறுப்பேற்றது. எனினும் இப்பாடசாலையின் அதிபர்களாக தொடர்ந்தும் திருக்குடும்பசபை கன்னியர்களே 1994ம் ஆண்டுவரை இருந்து வந்தனர்.

1992இல் ஏற்ப்பட்ட யுத்த நிலமை கரணமாக பாடசாலைச் சொத்துக்கள் ஆவணங்கள் அனைத்தையும் இழந்தநிலையில் பல்வேறு இடங்களிலும் பல்வேறு சிரமங்களின் மத்தியிலும் கல்விச் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வந்தது. 1996ம் ஆண்டு சொந்த மண்ணில் இயங்கக்கூடிய நிலை ஏற்பட்டபோதும் சொந்தப்பாடசாலைக் கட்டிடத்தில் செயற்பட முடியாத நிலையில் மாதகல் விக்கினேஸ்வரா வித்தியாலயத்தில் இப் பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் நடைபெற்றது. பின்னர் சேதமடைந்த பாடசாலைக் கட்டிடத்தைக் புனரமைத்து 1998.03.02 தொடக்கம் இப் பாடசாலை இயங்கத் தொடங்கியது.

வளங்கள்

  • நூலக எண்: 13940 பக்கங்கள் 54-55

வெளி இணைப்புக்கள்