நிறுவனம்:யாழ்/ மயிலிட்டி றோமன் கத்தோலிக்க வித்தியாலயம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:29, 21 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{நிறுவனம்| பெயர்=யாழ்/ மய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ மயிலிட்டி றோமன் கத்தோலிக்க வித்தியாலயம்
வகை பாடசாலைகள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் மயிலிட்டி
முகவரி மயிலிட்டி, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

கத்தோலிக்க யாழ். மேற்றிராசனத்தின் மேன்மை தங்கிய பொஞ்சீன் ஆண்டகையின் உழைப்பினலும், கோவைக் குருக்களின் உதவியினாலும் ஆங்காங்கே திரிந்த மாணவர்களை ஒன்று சேர்த்து 1873ஆம் ஆண்டு மாசி மாதம் யாழ்ப்பாணத்தில் மயிலிட்டி பெரிய நட்டுத்தேவன்துறை எனும் இடத்தில் காணிக்கை மாதா தேவாலயத்துக்கு அருகாமையிலுள்ள வீதியோரமாக அமைந்துள்ள வளவில் யாழ்/ மயிலிட்டி றோமன் கத்தோலிக்க பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. தொடக்கத்தில் 50 ஆண்களும் 02 பெண்களும் கல்வி கற்றனர்.

1931ஆம் ஆண்டு யாழ். மேற்றிராசனத்திலிருந்த வந்தனைக்குரிய கியோமர் ஆண்டகை இந்த கிராமத்து மக்களின் கல்வியறிவையும் ஒழுக்கத்தையும் மேன்மையடையச் செய்யவேண்டித் திருக்குடும்ப கன்னியரை கல்வி பயிற்ற அனுப்பி வைத்தார். 1873ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப் பாடசாலை 1963.04.01இல் அரசினால் சுவீகரிக்கப்பட்டது.

வளங்கள்

  • நூலக எண்: 13940 பக்கங்கள் 38-39

வெளி இணைப்புக்கள்