ஆளுமை:சின்னத்துரை, கேசவப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
Thapiththa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:36, 18 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சின்னத்துரை, கேசவப்பிள்ளை (நீலாவணன்)
தந்தை கேசவப்பிள்ளை
தாய் தங்கம்மா
பிறப்பு 1931.05.31
இறப்பு 1975.01.11
ஊர் நீலாவணை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கேசவப்பிள்ளை சின்னத்துரை கிழக்கு மாகாணத்தின் நீலாவணை எனும் இடத்தில் சித்த வைத்தியர் கேசவப்பிள்ளை, தங்கம்மா தம்பதியரின் மகனாக 1931 மே, 31ல் பிறந்தார். மட்டக்களப்பு அரசினர் ஆசிரிய கலாசாலையில் தமிழாசிரியராக பயிற்சி பெற்ற இவர் பயிற்றப்பட்ட தமிழ் ஆசிரியராகப் பல ஆண்டுகள் பணியாற்றினார்.

தனது பிறந்த ஊர் மீது கொண்ட பற்றின் காரணமாகவே ‘நீலாவணன்’ என்னும் புனைபெயருடன் எழுதி வந்தார். 1948ல் எழுத்துலகில் பிரவேசித்த இவரது பிராயச்சித்தம் என்ற சிறுகதை 1952 இல்சுதந்திரனில் வெளியானது. நீலவாணன் கவிதைகள், வேளாண்மைக் காவியம், வழி, ஒத்திகை முதலான நூல்களை வெளியிட்டுள்ளார்.

1967 இல் கல்முனை தமிழ் இலக்கியக் கழகத்தை ஆரம்பித்து, ‘பாடும் மீன்’ என்னும் இலக்கிய இதழை நடத்தினார். இவர் 1975 ஜனவரி, 11ம் திகதி காலமானார்.

வளங்கள்

  • நூலக எண்: 10 பக்கங்கள் 61
  • நூலக எண்: 3771 பக்கங்கள் 122


வெளி இணைப்புக்கள்