நிறுவனம்:யாழ்/ தெல்லிப்பளை யூனியன் கல்லூரி

நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:29, 18 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ தெல்லிப்பளை யூனியன் கல்லூரி
வகை பாடசாலைகள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் தெல்லிப்பளை
முகவரி தெல்லிப்பளை, யாழ்ப்பாணம்
தொலைபேசி 021321491
மின்னஞ்சல்
வலைத்தளம் http://unioncollege.lk/index.php

தெல்லிப்பளை யூனியன் கல்லூரி (Union College) இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் வலிகாமம் வடக்கு பகுதியில் அமைந்த தெல்லிப்பழை என்ற ஊரில் அமைந்துள்ளது. இப் பாடசாலையை 1816 ஆம் ஆண்டில் அமெரிக்க மிசனறியான டானியல் பூவர்(Daniel poor) என்பவர் நிறுவினார்.

பொது இலவசப் பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலையில் தமிழ்மொழிமூலம் கணிதம், புவியியல், திருமறை ஆகியன கற்பிக்கப்பட்டது. சிறிது காலத்தின் பின் ஆங்கிலமும் கற்பிக்கப்பட்டது. மதமாற்றமே மிஷனரிமாரின் முக்கிய நோக்கமாக இருந்த்தமையால் 1818இல் குடும்பவிடுதிப் பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்டபோது ஐந்து பெண்கள் சேர்க்கப்பட்டிருந்தனர். இவ் வகையில் பெண் கல்விக்கு முதல் வாய்ப்பளித்ததோடு முதற் கலவன் பாடசாலையாகவும் இது திகழ்ந்தது. 1940ஆம் ஆண்டு ஒக்டோபர் முதலாம் திகதி முதல் யூனியன் கல்லூரி எனப் பெயர் மாற்றம் பெற்று சிறப்பாக இயங்கி வருகின்றது..

வளங்கள்

  • நூலக எண்: 13940 பக்கங்கள் 01-08

வெளி இணைப்புக்கள்