நிறுவனம்:யாழ்/ வேலணை கோபுரத்தடி ஞானவைரவர் கோவில்

நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:59, 17 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ வேலணை கோபுரத்தடி ஞானவைரவர் கோவில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் வேலணை
முகவரி கோபுரத்தடி, வேலணை, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

கோபுரத்தடி ஞானவைரவர் கோவில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் வேலணையில் முந்தாய் குளக்கரையில் மிகப்பெரிய ஆலமர தல விருட்சத்தின் கீழ் மிக அழகுற அமைந்து காணப்படுகின்றது.

கோபுரத்தடி என அழைப்பதற்கு காரணம் இக் கோவிலிற்கு அருகில் பெரிய கோபுரம் ஒன்று இருந்தமையாகும். 1987ஆம் ஆண்டு ஆலய புனருத்தாரண பணிகளை திருமதி ஞானாம்பிகை இராமநாதன் ஆரம்பித்த பொழுது மக்கள் அனைவரும் இடம்பெயர்ந்து சென்றமையால் ஆலயம் பேரழிவுக்குட்பட்டது. பின்னர் 2002இல் இங்கிலாந்தில் வாழும் இக் கிராம மக்களும், ஊர் மக்களும் மனமுவந்து பொருளுதவி வழங்கியதால் ப.வேதநாயகம் அவர்களின் தலமையில் கோயில் புனருத்தாரண வேலைகள் செய்யப்பட்டு 2004ஆம் ஆண்டு மாசி மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 122-123