ஆளுமை:திரவியம் இராமச்சந்திரன், வேலுப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
Thapiththa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:51, 17 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=திரவியம் இர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் திரவியம் இராமச்சந்திரன்
தந்தை வேலுப்பிள்ளை
தாய் பாக்கியம்
பிறப்பு 1919.10.03
இறப்பு 1988.04.16
ஊர் கல்முனை
வகை கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

திரவியம் இராமச்சந்திரன் அம்பாறை மாவட்டம், கல்முனையில் வேலுப்பிள்ளை, பாக்கியம் தம்பதிகளின் மகளாக 1919 ஒக்டோபர் 03ம் திகதி பிறந்தார். இவர் தனது ஆரம்பக் கல்வியை கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையிலும், உயர் கல்வியை மட்டக்களப்பு வின்சண்ட் மகளிர் பாடசாலையிலும் பெற்றுக் கொண்டார்.

உடுவில் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் ஆசிரிய பயிற்சியை பெற்றுக்கொண்ட இவர் இலங்கைப் பல்கலைக்கழகத்திலே வித்துவான் டிப்ளோமாவைப் பெற்றுக்கொண்டார். அதைத்தொடர்ந்து கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையிலும், மட்டக்களப்பு வின்சண்ட் மகளிர் பாடசாலையிலும் ஆசிரியராகப் பணியாற்றிய திரவியம் தாண்டவன்வெளி பெண்கள் பாடசாலையில் அதிபராக பணி செய்தார்.

இவர் கல்லூரி மட்டத்தில் உத்தமன் பரதன், செஞ்சோற்றுக் கடன் தீர்த்த செம்மல், கோலியாத்தை வென்ற குமரன், பாலன் பிறந்தான் ஆகிய கூத்துக்களை ஆகிய கூத்துக்களையும், மனோன்மணியம், பாண்டியன் பரிசு, கடல் கண்ட கனவு, பார்த்திபன் கனவு, அம்பை பெற்ற அன்பு ஆகிய நாடகங்களையும் எழுதி மேடையேற்றி அறிமுகம் செய்ததோடு மாவட்ட ரீதியான கூத்து, நாடகப் போட்டிகளில் மத்தியஸ்தம் வகித்துள்ளார். இவர் 1988 ஏப்ரல், 16ம் திகதி காலமானார்.

வளங்கள்

  • நூலக எண்: 3771 பக்கங்கள் 96-97