நிறுவனம்:யாழ்/ வேலணை மயிலைப்புலம் ஐயனார் ஆலயம்
பெயர் | யாழ்/ வேலணை மயிலைப்புலம் ஐயனார் ஆலயம் |
வகை | இந்து ஆலயங்கள் |
நாடு | இலங்கை |
மாவட்டம் | யாழ்ப்பாணம் |
ஊர் | வேலணை |
முகவரி | மயிலைப்புலம், வேலணை, யாழ்ப்பாணம் |
தொலைபேசி | |
மின்னஞ்சல் | |
வலைத்தளம் |
கட்டுவன் கோவில் என அழைக்கப்படும் மயிலைப்புலம் ஐயனார் ஆலயமானது இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் வேலணையில் அமைந்துள்ளது.
நொச்சிக்காட்டின் மையத்தில் ஒரு கிளுவை மரம் தென்பட்டதாகவும், அதனருகில் செப்பனிடப்பட்ட ஒரு கல்லில் கற்பூரம் கொழுத்திய அடையாளம், ஒரு சிறுமண் சட்டியில் எரிந்ததிரி வேப்பெண்ணை மணம், இரவு வேளைகளில் ரம்மியமான ஒளி பிரகாசிப்பது போன்றவற்றை கண்ட மக்கள் தங்களுக்குள் இது பற்றி உரையாடியதாகவும் அச் சமயம் உருவேறிய ஒரு மூதாட்டி தெய்வம் வரம் பெற்றவளாய் அரிகரபுத்திரராகிய ஐயனார் தான் இங்கு இருக்கின்றார், எம்மையும் எம் மந்தைகளையும் பாதுகாத்து வரும் காவற் தெய்வமான இவரை நாம் ஆதரிக்க வேண்டும், பொங்கி படைக்க வேண்டும் என்று ஆவேசமாக கத்திக் கொண்டு கீழே விழுந்து விட்டதாகவும் இதனால் உருவாகியதே இந்த ஹரிஹரபுத்திர ஐயனார் கோவில் என்றும் ஆலய வரலாறு கூறுகின்றது.
வளங்கள்
- நூலக எண்: 4640 பக்கங்கள் 100-106