ஆளுமை:நல்லையா, வல்லிபுரம்.
பெயர் | நல்லையா, வ. |
தந்தை | வல்லிபுரம் |
பிறப்பு | 1909.09.10 |
இறப்பு | 1976.12.27 |
ஊர் | மட்டக்களப்பு |
வகை | கல்வியியலாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
வ. நல்லையா மட்டக்களப்பு, புளியந்தீவு என்ற கிராமத்தில் 1909 செப்டெம்பர் 10ல் பிறந்தார். இவர் மட்டக்களப்பு, அட்டாளைச்சேனை, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாக கொண்ட ஆசிரியரும், அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், அமைச்சரும் ஆவார்.
புனித மிக்கேல் கல்லூரியில் கல்வி கற்று, லண்டன் பல்கலைக்கழக B. A. பட்டதாரியான இவர் பின்னர் மகரகமை ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியில் பயின்று பயிற்சி பெற்ற ஆசிரியரானார். முதலில் சிவானந்த வித்தியாலயத்தில் ஆசிரியராகவும், அட்டாளைச்சேனை ஆசிரிய பயிற்சிக் கலாசாலை அதிபராகவும் பதவி வகித்தார்.
அத்தோடு இலங்கைச் சட்டசபை உறுப்பினராகவும் இலங்கை தந்தி தபால் துறையின் அமைச்சராகவும் பணியாற்றினார். இவர் இலவசக் கல்விக்காக திட்டமிட்டவர். மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலை, வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயம் ஆகியவற்றின் தோற்றத்திற்காக உழைத்தவர். இவர் 1976 டிசம்பர் 27ம் திகதி காலமானார்.
வளங்கள்
- நூலக எண்: 3771 பக்கங்கள் 72