ஆளுமை:ரவீந்திரன், முருகேசு

நூலகம் இல் இருந்து
Thapiththa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:54, 10 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=ரவீந்திரன்,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ரவீந்திரன், முருகேசு
தந்தை முருகேசு
தாய் சிவசோதியம்மா
பிறப்பு
ஊர் காரைநகர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முருகேசு ரவீந்திரன் காரைநகர் வலந்தலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தந்தையார் முருகேசு தபால் அதிபராக பணிபுரிந்தவர். ரவீந்திரன் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் கல்வி கற்று இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் முதற்தர அறிவிப்பாளராக பணிபுரிகிறார்.

அத்தோடு சிறுகதைகளையும் எழுதும் ஆற்றல் கொண்ட இவரது முதலாவது சிறுகதை 'மாறும் மனிதர்கள்' என்ற தலைப்பில் 12.08.1990ல் வீரகேசரி வார வெளியீட்டில் வெளியானது. இவர் தனது சிறுகதைகள் யாவற்றையும் தொகுத்து 'வாழ்க்கைப் பயணம்' எனும் சிறுகதைத் தொகுப்பு நூலாக வெளியிட்டுள்ளார்.

1993ல் வானொலியில் ஒளிபரப்பான 'நாளைய சந்ததி' நிகழ்ச்சி மூலம்1994ல் வானொலி நாடக கலைஞராக தெரிவு செய்யப்பட்டார். கல்விச் சேவையில் 'ஆய்வரங்கம்' எனும் நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தினார்.1997ல் வானொலியில் பகுதி நேர அறிவிப்பாளராகி 1999ல் செய்தி வாசிப்பாளராக தெரிவு செய்யப்பட்டு 2000ம் ஆண்டில் ஒப்பந்த அறிவிப்பாளரானார். 2001ல் நிரந்தர அறிவிப்பாளராகி தற்போது முதற்தர அறிவிப்பாளராக பதவி உயர்வு பெற்று பணியாற்றுகிறார்.

வளங்கள்

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 351
  • நூலக எண்: 11126 பக்கங்கள் பின் அட்டை