ஆளுமை:கணேசன், கைலாயக்கம்பர்

நூலகம் இல் இருந்து
Thapiththa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:15, 9 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=கணேசன், என். ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கணேசன், என். கே.
தந்தை கைலாயக்கம்பர்
பிறப்பு
ஊர் காரைநகர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

என். கே. கணேசன் காரைநகரில் வாழ்ந்த சிறந்த இசை வேளாளர் குடும்பத்தில் தோன்றியவர். இவர் தன் திறமையால் புகழ் பெற்ற நாதஸ்வரக் கலைஞர் ஆவார்.

இவரது தந்தையார் கைலாயக் கம்பர் காரைநகரில் வாழ்ந்த மூத்த நாதஸ்வரக் கலைஞரும் ஈழத்துச் சிதம்பரம் எனப்படும் சிவன் கோவிலின் ஆஸ்தான வித்துவானுமாகப் பணிபுரிந்தவராவார். கணேசன் தந்தையாரிடமும், மூளாயைச் சேர்ந்த அமரர் திரு. ஆறுமுகம் அவர்களிடமும், மாவிட்டபுரம் அமரர் திரு. ராசா அவர்களிடமும் நாதஸ்வரக் கலையை முழுமையாகவும், முறையாகவும் கற்றவர்.

நாற்பது ஆண்டுகள் ஈழத்து சிதம்பரத்தின் ஆஸ்தான வித்துவானாக பணிபுரிந்த இவர் நாதஸ்வர கலாநிதி, நாதஸ்வர இசைமணி, நாத இசைச் சக்கரவர்த்தி எனப் பல கௌரவப் பட்டங்களைப் பெற்றுள்ளார். இலங்கை வானொலிக் கலைஞராகவும் பணி புரிந்தார்.

வளங்கள்

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 348-349