ஆளுமை:தேவதாசன், செல்லத்துரை
பெயர் | தேவதாசன், எஸ். ஆர். எஸ். |
தந்தை | செல்லத்துரை |
பிறப்பு | 1935.08.24 |
ஊர் | காரைநகர் |
வகை | கல்வியியலாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
எஸ். ஆர். எஸ். தேவதாசன் காரைநகரில் வலந்தலை எனும் குறிச்சியில் 24.08.1935ல் பிறந்தார். இவரது தந்தையார் செல்லத்துரை யாழ்ப்பாணத்தின் பிரபல பிடவை வர்த்தகராவார்.
செல்லத்துரையின் மகனான தேவதாசன் ஆரம்பக் கல்வியை இலகடி சைவத்தமிழ் வித்தியாலயத்திலும், உயர்கல்வியை காரைநகர் இந்துக் கல்லூரி, வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியிலும் கற்றார். மேற்படிப்பை இந்தியாவில் சென் ஜோசப் கல்லூரியில் கற்று தேறினார். பின் இலங்கையில் கல்வித்துறை, இந்துநாகரீகத்துறையில் டிப்ளோமாப் பெற்றார்.
ஆசிரியத் தொழிலை அப்புத்தளை தமிழ் மகாவித்தியாலயத்திலும், காரைநகர் இந்துக்கல்லூரியிலும் ஆற்றிவரும் வேளையில் களபூமி சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாசாலைக்கு அதிபராக பதவி உயர்வு பெற்றார். இடப்பெயர்வின் போது காரைநகர் இந்துக்கல்லூரியின் அதிபராகப் பணிபுரிந்தார்.
அதன் பின் காரைநகரிலிருந்த 14 பாடசாலைகளுக்கும் கல்விப்பணிப்பாளராக நியமிக்கப்பட்டார். மணிவாசகர் சபைத் தலைவராக 15 வருடங்கள் பணி செய்ததோடு தில்லைக் கூத்தன் திரு நடனம், பிரதோஷ விரதம் ஆகிய நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 3769 பக்கங்கள் 326-328