நிறுவனம்:யாழ்/ நெடுந்தீவு நெலுவினி சித்திவிநாயகர் கோவில்
நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:20, 7 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Pirapakar, நிறுவனம்:யாழ்/ நெடுந்தீவு நெலுவினி சித்தி விநாயகர் கோவில் பக்கத்தை [[நிறுவனம்:யாழ்/ நெடு...)
பெயர் | யாழ்/ நெடுந்தீவு நெலுவினி சித்திவிநாயகர் கோயில் |
வகை | இந்து ஆலயங்கள் |
நாடு | இலங்கை |
மாவட்டம் | யாழ்ப்பாணம் |
ஊர் | நெடுந்தீவு |
முகவரி | நெடுந்தீவு மேற்கு, நெடுந்தீவு, யாழ்ப்பாணம் |
தொலைபேசி | |
மின்னஞ்சல் | |
வலைத்தளம் |
நெலுவினி சித்தி விநாயகர் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தின் தென்மேற்கே அமைந்துள்ள சப்த தீவுகளில் ஒன்றான நெடுந்தீவில் நெழுவினி மேற்கு புரதான வீதிக்கு அருகாமையில் அமைந்துள்ளது. இந்த ஆலயம் 200 வருடப் பழமை வாய்ந்ததாகும்.
தொழிலுக்காகச் சென்று வீடு திரும்பும் தொழிலாளர்கள் இரவு நேரங்களில் இந்த வீதி வழியாக வரும்வேளை பற்றைகள் அடர்ந்துள்ள இப்பகுதியில் தெரியும் ஒளியைக் கண்டு இந்தப் பகுதியில் வசிக்கும் இராமநாதன் என்பவரிடம் தெரிவித்தனர் எனவும் அவர் தன்னுடன் வேறு சிலரையும் அழைத்துச் சென்று குறிப்பிட்ட இடத்தைத் துப்பரவு செய்த சமயம் செம்பினாலான விக்கிரகம் ஒன்று கிடக்கக் கண்டு சிறிய கொட்டில் ஒன்றை அமைத்து வழிபட்டதாகவும் இந்த ஆலயத்தின் வரலாறு கூறுகின்றது.