ஆளுமை:தியாகராசா, ஆறுமுகம்
நூலகம் இல் இருந்து
Thapiththa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:54, 5 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=தியாகராசா, ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | தியாகராசா, ஆறுமுகம் |
தந்தை | ஆறுமுகம் |
பிறப்பு | |
ஊர் | காரைநகர் |
வகை | அதிபர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
வீச்சர்வீடு என்ற பாரம்பரியப் பரம்பரையைச் சேர்ந்தவரான ஆறுமுகம் தியாகராசா மலேசியாவில் இருந்தவராவார். டாக்டருக்கு படிப்பதற்காக தந்தையாரால் இந்தியாவிற்கு அனுப்பப்பட்ட இவர் அடையாறில் சங்கீதமும், பொருளாதாரப் பாடத்தில் M.A, M.LIT பட்டங்களைப் பெற்றுவந்தார்.
காரைநகர் இந்துக் கல்லூரியில் ஆசிரியராக பணிபுரிந்து பின் அதிபராக பணிபுரிந்தார். பத்து வருடங்கள் வட்டுக்கோட்டைத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக இருந்து காரைநகருக்கு சேவைகள் செய்தவர். மின்சார இணைப்பு இவரது காலத்திலேயே காரைநகருக்கு கிடைத்தது.
1977ல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டு இந்தியாவிற்கு சென்று பொருளியலில் P.H.D. செய்து வந்தார். பின் மாவட்டசபைத் தேர்தலில் ஈடுபட்டார். இவர் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் அமைக்க ஒரு முன்னோடியாக இருந்தவராவார்.
வளங்கள்
- நூலக எண்: 3769 பக்கங்கள் 324-326