ஆளுமை:இராமநாதன், விநாசித்தம்பி

நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:55, 4 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இராமநாதன், விநாசித்தம்பி
தந்தை விநாசித்தம்பி
பிறப்பு
ஊர் புங்குடுதீவு
வகை வர்த்தகர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

விநாசித்தம்பி இராமநாதன் அவர்கள் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் கல்வியியலாளர். கொழும்பு, கிளிநொச்சி, சீதுவை போன்ற இடங்களில் வர்த்தகம் செய்து வந்த இவர் சீதுவ இராமநாதன் என்று அழைக்கப்பட்டவர் ஆவார்.


இவர் புங்குடுதீவின் கோவில்கள் பாடசலைகள் போன்றவற்றிற்கு பேருதவி புரிந்தார். மடத்துவெளி வயலூர் பாலசுப்பிரமணிய கோவிலின் திருப்பணிச் சபையில் அங்கத்தவராக இருந்து அக்கோவிலின் வளர்ச்சியில் முன்னின்று உழைத்ததோடு அதன் இராஜகோபுர அமைப்புக்காக சொர்ணலிங்கம் போன்ற பல அன்பர்களை ஒன்று கூட்டி 2005ஆம் ஆண்டு மார்ச் மாதம் அத்திவாரம் இட்டார்.


புங்குடுதீவின் பெயரை சிதம்பரத்திலும் புகழ் பெறச் செய்தார். புண்ணியநாச்சி மடம் என்ற பாரிய மடத்தை சிதம்பரத்தில் கட்டிக் கொடுத்தார். அம்மடத்தின் பெயர்ப்பலகையில் இவரின் பெயரும் மேலும் சில புங்குடுதீவு பெருமக்களின் பெயர்களும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 268-269