ஆளுமை:தேவதாஸ், கண்ணத்துரை

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:07, 4 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=தேவதாஸ், கண..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தேவதாஸ், கண்ணத்துரை
தந்தை கண்ணத்துரை
பிறப்பு 1954
ஊர் புங்குடுதீவு
வகை வர்த்தகர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கண்ணத்துரை தேவதாஸ் அவர்கள் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் வர்த்தகர். இவர் ஶ்ரீ சித்தி விநாயகர் வித்தியாலயம், மகாவித்தியாலயம் ஆகியவற்றில் கல்வி கற்றவர். இவர் 1971ஆம் ஆண்டு புங்குடுதீவு மேற்கு மக்கள் கமிட்டியில் அங்கத்தவராக இருந்தவராவார். அத்துடன் 1973இல் இளைஞர் முன்னேற்றக் கழகம் இவரால் ஆரம்பிக்கப்பட்டது.

சிறுவயது முதலே பெரியபுலம் பிள்ளையார் கோவில் மீது பக்தி கொண்டு செயற்பட்ட இவர் பின் அக்கோவிலின் நிர்வாகசபைத் தலைவராக செயற்பட்டார். 1983ஆம் ஆண்டு புங்குடுதீவு மேற்கு கிராமோதய சபைத் தலைவராக கடமையாற்றினார். திருநாவுக்கரசு அவர்களின் சர்வோதய இயக்கத்தில் இவரும் இணைந்து பணியாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 270-271