ஆளுமை:கனகசபை, சின்னத்தம்பி

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:39, 4 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கனகசபை, சின்னத்தம்பி
தந்தை சின்னத்தம்பி
தாய் சேதுப்பிள்ளை
பிறப்பு
ஊர் புங்குடுதீவு
வகை வர்த்தகர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சின்னத்தம்பி கனகசபை அவர்கள் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் வர்த்தகர். இவர் தனது ஆரம்பக் கல்வியை புங்குடுதீவிலும், உயர்கல்வியை திருநெல்வேலி முத்துத்தம்பி வித்தியாலயத்திலும் பயின்றார். 1949ஆம் ஆண்டில் மகோவில் வர்த்தக தொழிலை மேற்கொண்டு மகோ கனகர் என்னும் பெயரைத் தனதாக்கிக் கொண்டார்.


வர்த்தக துறை மூலம் உயர்ந்த இவர் தான் பிறந்த மண்ணின் வட்டார அங்கத்தவராகவும், வல்லன்பதி அருள்மிகு பாலசுப்பிரமணியர் கோயில் அறங்காவலர் சபைத் தலைவராக இருந்து இரண்டு முறை இக் கோவில் கும்பாபிஷேகத்தை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


அத்தோடு புங்குடுதீவு 3ஆம் வட்டாரத்தில் இவர் வசித்து வரும் காலங்களில் தனது வீட்டுக்கு அருகாமையில் பெருங்காடு அமெரிக்க மிஷன் பாடசாலையை விஸ்தரிப்பதற்காக காணி தேவைப்பட்டபொழுது தனது வீட்டோடு சேர்ந்த காணியின் சிறு பகுதியை கொடுத்து அங்கு கல்வி பயின்ற மாணவர்களுக்கு இன்னும் பல வகுப்புக்கள் உருவாக காரணமாக இருந்தார். இவரது சேவைகள் இன்றும் நினைவில் கொள்ளப்படுகின்றன.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 264-265