ஆளுமை:மயில்வாகனம், என். கே.

நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:29, 4 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மயில்வாகனம், என். கே.
பிறப்பு
ஊர் புங்குடுதீவு
வகை வர்த்தகர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

என்.கே.மயில்வாகனம் அவர்கள் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் வர்த்தகர். வர்தகத்தோடு பொதுப் பணிகளிலும், சமூகப் பணிகளிலும் ஈடுபட்டவர். கொழும்பு கதிரேசன் கோவில், புங்குடுதீவு மேற்கு இறுபிட்டி மூத்தநயினார்புலம் வீரகத்தி விநாயகர் ஆலயம் ஆகியவற்றின் தலைவராகவும், காப்பாளராகவும் விளங்கி ஆலயத்தின் முக்கியப் பணிகளைச் செய்துள்ளார். அத்துடன் மூலஸ்தானம், முன்மண்டபம் என்பவற்றை கருங்கலினால் செய்ததுடன் கிருஷ்ணர் ஆலயம், பத்திரகாளி ஆலயம், சண்டேசுரர் ஆலயம் யாகசாலை, அர்த்தமண்டபம் ஆகியவற்றை அமைக்க முன்னின்று செயலாற்றினார்.

புங்குடுதீவு மகா வித்தியாலய வளர்ச்சியில் பெரிதும் ஈடுபட்ட இவர் 1973ஆம் ஆண்டு புங்குடுதீவு சுப்பிரமணிய வித்தியாசாலையிலிருந்து புங்குடுதீவு மகா வித்தியாலயத்திற்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கி மாணவர்களின் தாகசாந்திக்காக பெரும்பணி செய்தவர். இவ்வாறு பல சேவைகளை செய்த இவரை புங்குடுதீவு மக்கள் என்றும் நினைவிற் கொள்வர்.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 259