பகுப்பு:கவிஞன் (புதியது)

நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:04, 4 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

'கவிஞன்' இதழானது கிழக்கிலங்கை மட்டக்களப்பிலிருந்து வெளிவருகின்ற கவிதைக்கான காலாண்டு இதழாகும். இதன் வெளியீடு 2010ஆம் ஆண்டு பங்குனி மாதம் ஆரம்பிக்கப்பட்டு மாத இதழாக தொடர்ச்சியாக வெளிவந்தது. இதழின் 20வது வெளியீட்டிலிருந்து காலாண்டு இதழாக வெளிவருகின்றது. இதழின் ஆசிரியர் திரு.சதாசிவம் மதன் ஆவார்.

கவிதைக்கென்றே அமைந்த தனித்துவமான இதழாக இது இருப்பதோடு எல்லா வயதுப் பிரிவினரையும் உள்வாங்கி அவர்களுக்குரிய களத்தினை அமைத்துக் கொடுக்கின்ற சிறப்பினையும் கொண்டது. குறிப்பாக உள்ளடக்கத்தில் மேசைக் கிறுக்கல்கள் எனும் தலைப்பில் பள்ளி மாணவர்களுக்கான களத்தினை அமைக்கின்றது. அறிமுகப்புதுமுகம் பக்கத்தில் இளம் கவிஞர்களையும், இம்மாதப் பிரபலம் பக்கமூடாக புகழ்பெற்ற கவிஞர்கள் பற்றிய குறிப்பும், கவிதை நூல் அறிமுகமும் இதழின் உள்ளடகத்தை கனதியாக்குகின்றது. தொடர்புகளுக்கு:- கூட்டுறவுக் கடை வீதி, புதுக்குடியிருப்பு-05, மட்டக்களப்பு, இலங்கை. T.P:- 0094-77-3620328 E-mail:- kavignan@gmail.com Web:- www.kavignan.com

"கவிஞன் (புதியது)" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.