ஆளுமை:முத்துக்குமாரு, சின்னையா

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:05, 3 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=முத்துக்கு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் முத்துக்குமாரு சின்னையா
தந்தை சின்னையா
பிறப்பு
ஊர் புங்குடுதீவு
வகை வர்த்தகர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சின்னையா முத்துக்குமாரு அவர்கள் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் வர்த்தகர். இளவயது முதலே நல்லொழுக்கமும் இறைபக்தியும் நிறைந்து விளங்கிய இவர் கல்வி பயின்று வணிக தொழிலை மேற்கொண்டார். யாழ்ப்பாணத்தில் அம்பிகாபதி ரெக்ஸ்ரைல்ஸ் என்ற நிறுவனத்தை இவரே ஆரம்பித்தவராவார். நேர்மையும், உழைப்பும் கடவுள் பக்தியும் இவரைப் பெருமகனாக்கின.

கண்ணகை அம்மன் ஆலயத்தின் பரிபலானசபை உறுப்பினராகவும், பின்னர் இவ்வாலயத்தின் தேர்த்திருப்பணிச் சபையின் தலைவராகவும் இருந்து கொழும்பு முதலான இடங்களுக்குச் சென்று நிதி சேர்த்து வந்து சித்திரத் தேர்த்திருப்பணியை சிறப்புற நிறைவேற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 300