ஆளுமை:முத்தையாபிள்ளை, முருகேசு

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:43, 3 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=முத்தையாபி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் முத்தையாபிள்ளை, முருகேசு.
தந்தை முருகேசு
தாய் முத்துப்பிள்ளை
பிறப்பு
ஊர் புங்குடுதீவு
வகை வர்த்தகர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மூனா மூனா என பலராலும் அறியப்பட்ட முருகேசு முத்தையாப்பிள்ளை புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். ஆரம்பத்தில் புங்குடுதீவிலும் பின்பு இளவாலையிலும் கல்வி கற்ற இவர் தனது இளவயதிலேயே தந்தையை இழந்துவிட்டார்.

தனது 20ஆவது வயதில் தொழில் தேடிக் கொழும்புக்குச் சென்ற இவர் ஆரம்பத்தில் 5ஆம் குறுக்குத்தெருவில் ஒரு கடையில் காரியஸ்தராகக் கடமையாற்றினார். பின்னர் தனது தம்பியாருடன் இணைந்து கூட்டு வியாபாரம் செய்தார். இவர்கள் தங்களது கடும் முயற்சியால் பெரும் பணக்காரர் ஆனார்கள்.

முத்தையாபிள்ளை தனது விடா முயற்சியினால் கொழும்பில் பல நிலபுலங்களை வாங்கினார். ஆட்டுப்பட்டித்தெருவில் உள்ள உம்பிச்சிப் பிளேசில் உள்ள வீடுகளில் பல இவருக்கு சொந்தமாகின. அத்தோடு தனது வர்த்தக நிலையங்களில் புங்குடுதீவு மக்களுக்கு வேலை வழங்கினார். கண்ணகை அம்மன் கோவிலைப் புணருத்தாணம் செய்து தனது தாயார் முத்துப்பிள்ளையின் பெயரால் அன்னதான மடம் அமைத்து திருவிழாக்களின் போது அன்னதானம் வழங்கினார். இவர் தான் வாழ்ந்த காலத்தில் நாட்டுக்கும் தான் பிறந்த புங்குடுதீவுக்கும் பல்வேறு சேவைகளை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 257