ஆளுமை:ஆறுமுகம், வீ. வீ. கே.

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:47, 2 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=ஆறுமுகம், வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஆறுமுகம், வீ. வீ. கே.
பிறப்பு
ஊர் புங்குடுதீவு
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வீ.வீ.கே.ஆறுமுகம் அவர்கள் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் கலைஞர். யாழ்ப்பாண மாவட்டத்தில் வில்லிசையை வளர்த்த முன்னோடிகளில் இவர் முக்கியமானவர். புங்குடுதீவு கணேச மகாவித்தியாலயத்தில் நீண்ட காலம் ஆசிரியராக கடமையாற்றிய இவருக்கு வில்லிசையும், கதாகாலேட்சபமும் கைவந்த கலைகளாகும்.

இவரே திருப்பூங்குடி என்ற பெயரை முதன் முதலில் புங்குடுதீவுக்கு சூட்டியவர் ஆவார். வீ.வீ.கே.வில்லிசைக்குழு என்ற பெயரில் வில்லிசைக் குழுவொன்றை நீண்ட காலம் நடத்தி வந்த இவர் இலங்கையில் மட்டுமன்றி இவரது வில்லிசைக் கச்சேரிகள் சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளிலும் நடைப்பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 240A