ஆளுமை:தம்பிராசா, வீரவாகு
பெயர் | தம்பிராசா, வீரவாகு |
தந்தை | வீரவாகு |
தாய் | வள்ளியம்மை |
பிறப்பு | 1904 |
இறப்பு | 01.03.1986 |
ஊர் | புங்குடுதீவு |
வகை | வைத்தியர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
தம்பையா எனப் பலராலும் அறியப்படும் வீரவாகு தம்பிராசா அவர்கள் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் வைத்தியர். இவர் ஏழு தலைமுறைகளுக்கு மேலான வைத்திய சோதிடப் பரம்பரையில் வந்தவராவார். இவர் தமது மாமனாரும் பிரபல வைத்தியருமான இலட்சுமணப்பிள்ளை அவர்களிடம் வைத்தியம் பயின்று இலங்கை அரசின் ஆயுர்வேத வைத்திய சபையின் நேர்முகத் தேர்வுக்கு தோற்றிச் சுதேச வைத்தியராக பதவி பெற்றவர் ஆவார். இவர் கைநாடி பார்த்து நோயாளர்களின் நோய்களைக் கூறும் வல்லமையும் பெற்றிருந்தார்.
ஆரம்பத்தில் தமது குருவான இலட்சுமணபிள்ளையுடன் தீவுப்பகுதியின் பாகங்களுக்குச் சென்று வைத்திய சேவைகளில் ஈடுபட்டார். பின்னர் 1939ஆம் ஆண்டில் சிங்கப்பூர், மலேசியா நாடுகளுக்கு சென்ற இவர் சில வருட காலம் அந்நாடுகளில் தங்கியிருந்து வைத்திய சோதிட சேவை புரிந்தார். அத்தோடு வட இலங்கை சித்த ஆயுர்வேத வைத்திய சங்கத்தின் உறுப்பினராகவும் விளங்கியதோடு சித்தர்களால் அருளப்பட்ட ஏட்டுச் சுவடிகளை கற்றதன் பேறாக நோய்களின் அறிகுறிகளையும் அவற்றிற்கான பரிகார முறைகளையும் பாட்டின் மூலம் எடுத்துக் கூறும் திறமையும் இவரிடம் காணப்பட்டது. வாக்குச் சித்தியும், வைத்தியச் சித்தியும் பெற்ற இவர் ஆங்கில வைத்தியம் கற்றோரால் கைவிடப்பட்ட பல நோயாளர்களைக் கூட குணமாக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
வளங்கள்
- நூலக எண்: 11649 பக்கங்கள் 222-223