ஆளுமை:கருணாகரன், சுப்பிரமணியம்
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:15, 31 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | கருணாகரன், சுப்பிரமணியம் |
தந்தை | சுப்பிரமணியம் |
பிறப்பு | 20.09.1934 |
ஊர் | புங்குடுதீவு |
வகை | சமூக சேவையாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சுப்பிரமணியம் கருணாகரன் அவர்கள் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் சமூக சேவையாளர். இவர் நீண்டகாலம் புங்குடுதீவு கிராம அபிவிருத்திச் சபையின் தலைவராகவிருந்து பெரும் பணியாற்றினார்.
புங்குடுதீவுக்கு மின்சாரம் வந்த போது மாகாவித்தியாலயம் முழுவதற்கும் தனது சொந்த செலவில் மின் இணைப்பை செய்து கொடுத்தார். 1984 முதல் 1989 வரை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத் தலைவராக இருந்து பணியாற்றியதோடு பல சமூக சேவைகளையும் ஆற்றியுள்ளார். 1972 காலப்பகுதியில் கடல் நீர் தரைப்பகுதிக்குள் வந்து விடாமலும், அதிகமான மழை நீர் கடலுக்குள் செல்லாமலும் தடுக்க கள்ளியாறு அணைத்திட்டத்தை செயற்படுத்தினார். புங்குடுதீவு அரசினர் மருத்துவமனையில் அபிவிருத்திச் சங்கத் தலைவராக இருந்து வைத்தியசாலை புணரமைப்பில் பெரும் பங்காற்றியமை குறிப்பிடத்தக்கது.
வளங்கள்
- நூலக எண்: 11649 பக்கங்கள் 214-215