ஆளுமை:பேரம்பலம், சி. வி.
நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:25, 28 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | பேரம்பலம், சி. வி. |
பிறப்பு | |
ஊர் | புங்குடுதீவு |
வகை | கல்வியியலாளர்கள் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சி.வி.பேரம்பலம் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் கல்வியியலாளர். இவர் புங்குடுதீவு கணேச வித்தியாசாலையில் ஆரம்பக் கல்வியை கற்றார்.
1971ஆம் ஆண்டு அரச ஆசிரியராக நியமனம் பெற்று வவுனியாவில் கடமையாற்றிய இவர் 1980ஆம் ஆண்டு புங்குடுதீவு மகாவித்தியாலயத்துக்கு மாற்றம் பெற்று வந்தார். 1958ஆம் ஆண்டு பாவற்குளம் மகாவித்தியாலயத்திலும், 1994 முதல் ஓமந்தை மத்திய கல்லூரியிலும், 1998 முதல் வவுனியா விபுலானந்த வித்தியாலயத்திலும் அதிபராக கடமையாற்றி 2004ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.
கல்விப் பணியில் மட்டுமன்றி சமூகப் பணியிலும் இவர் ஈடுபட்டார். இவரது சேவையைப் பாராட்டி சிறப்பு மலர் ஒன்றும் வெளியிடப்பட்டது. இவரின் கல்வி, சமூகசேவை காரணமாக வவுனியா தெற்கு வலயத்தில் சிறந்த அதிபர் என்ற பாராட்டையும் இவர் பெற்றுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 11649 பக்கங்கள் 200C